இவர்கள் வைராக்கியம் அல்லது பிடிவாதம் குணம் கொண்டவர்கள். தேச நலன் பற்றிய சிந்தனை இருக்கும். எல்லா காரியத்தையும் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்ற பண்பு இருக்கும். இவர்கள் துணிச்சல் மிகுந்தவர்கள். இவர்கள் பெரியவர்களிடம் மட்டுமே கீழ்படிவார்கள். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் இருக்கும். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும்.
ரிஷபம் (Taurus)
இவர்கள் பொதுவாக அகிம்சை வாதிகள். இவர்களிடம் இரக்க குணம் இருக்கும். இவர்கள் எந்த ஒரு செயலுக்கும் அதற்குரிய காரணத்தை அறிய முற்படுவார்கள். இவர்கள் அனைவரிடமும் அக்கறையுடன் நடந்து கொள்வார்கள். பெருந்தன்மையாக இருப்பது இவர்களது இயல்பு குணம். இவர்கள் பண்புடைமை வாதிகள் இவர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள்.
மிதுனம் (Gemini)
எழுதுதல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. இவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுக்கக் கூடியவர்கள். (அதாவது, இடத்திற்கு தகுந்தார் போல் செயல்படுபவர்கள்) இவர்களிடம் நகைச்சுவை கலந்த பேச்சு இருக்கும். இவர்கள் கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவில் வல்லவர்கள். இவர்களுக்கு எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். இவர்கள் காரண காரியம் அறிந்து செயல்பட கூடியவர்கள். இவர்களது இயல்பு தந்திரமாக பேசுதல் எதையும் புரிந்து கொள்ளும் திறன் இருக்கும்.
கடகம் (Cancer)
தொண்டு செய்தல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. அனைவருக்கும் நன்மை செய்ய விரும்புதல் என்பது இவர்களது இயல்பு. மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும். மன்னிக்கும் குணம் பெற்றவர்கள்.
சிம்மம் (Leo)
அனைத்து துறையிலும் தலைமை வகிக்க கூடியவர்கள். அனைத்து செயல்களிலும் இவர்களது ஒத்துழைப்பு மற்றவர்களுக்கு நன்றாக இருக்கும். சுதந்திரமாக செயல்பட கூடியவர்கள். எதையும் ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர்கள். ஒற்றுமை குணம் உடையவர்கள். தயாள குணம் கொண்டவர்கள். எதையும் பகிர்ந்து கொள்ளுதல் என்ற பண்பு இருக்கும். (இன்ப,துன்பங்களை நல்லவை,கெட்டவைகளை…)
கன்னி (Virgo)
தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அனைவரிடமும் பழகுதல் என்பது இவர்களது இயல்பு. சுதந்திரமான நிலை உடையவர்கள். தனிநபர் உரிமை பற்றி பேசுபவர்கள். தூய்மையான எண்ணம் உடையவர்கள். எதிலும் உண்மையாக நடந்து கொள்ளக் கூடியவர்கள். நட்பு பாராட்டக் கூடியவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள்.
துலாம் (Libra)
சமநிலை காத்தல் என்பது இவர்களது இயல்பு. பாரபட்சமின்மையின்றி நடக்கக் கூடியவர்கள். எதிலும் நியாயம் பேசுதல் இவர்களது இயல்பு. நடுநிலையாக நடக்கக் கூடியவர்கள். இவர்கள் அணிந்திருக்கும் துணியில் சிறு கறை இருந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
விருச்சிகம் (Scorpio)
உதவும் மனப்பான்மை உடையவர்கள். விழிப்புணர்வுடன் இருத்தல் இவர்களது பண்பு (எச்சரிக்கையாக இருத்தல்) எதிலும் சீரிய யோசனை உடையவர்கள். பகுத்தறிதல் இவர்களது இயல்பு. இவர்கள் அதிகம் மற்றவர்களை கண்காணிப்பார்கள். அறிவுநுட்பம் உடையவர்கள். கோபம் வந்துவிட்டால் தேள் போன்று வார்த்தைகளை கொட்டி விடுவார்கள்.
தனுசு (Sagittarius)
லட்சியம் உடையவர்கள். உழைப்பை நேசிப்பது இவர்களது இயல்பு. திடமான நோக்கம்/குறிக்கோளுடன் இருப்பார்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பவர்கள். நம்பிக்கைக்குரியவர்கள். ஊக்கத்துடன் முயற்சியும் வேண்டும் என்று நினைப்பவர்கள்.
மகரம் (Capricorn)
அமைதி குணம் உடையவர்கள். கண்ணியம்,கட்டுப்பாடு உடையவர்கள். சிறந்த வேலைக்காரர். எந்த வேலையை கொடுத்தாலும் சிறப்பாக முடிப்பார்கள். எதிலும் பொறுமை குணம் உடையவர்கள்.
கும்பம் (Aquarius)
சுய அதிகாரம் உடையவர்கள். மதிப்பு மற்றும் மரியாதையுடன் நடக்கக் கூடியவர்கள். இவர்களை மற்றவர்கள் கட்டுப்படுத்தினால் இவர்களுக்கு பிடிக்காது. ரகசியம் காப்பாளர்கள். பொது கட்டுப்பாடு உடையவர்கள். சுயமரியாதை குணமடையவர்கள்.
மீனம் (Pisces)
நற்குணம் உடையவர்கள். நடப்பதை முன்கூட்டியே அறிபவர்கள் ஞானியர்கள் நேர்மறை சிந்தனை உடையவர்கள். மீன் போன்ற விழிகளை பெற்றிருப்பவர்கள். முன்யோசனை உடையவர்கள். விருந்தோம்பல் பண்பு உடையவர்கள். மேலும் 12 ராசிகள் பற்றிய விரிவான அடிப்படை குறிப்புகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
80 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற கிளிக்
உங்களது ஜாதகத்தில் உள்ள ராசி கட்டம், நவாம்சம், அடிப்படை கணக்கீடுகள், தசா புத்தி கணக்கீடுகள், யோகங்கள், ஜாதக பலன்கள், செல்வம், சொத்து, கல்வி, நோய், திருமண வாழ்க்கை, தொழில் , தசா புத்தி பலன்கள், உங்களது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா அல்லது இல்லையா, உங்களது ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளதா அல்லது இல்லையா, பரிகாரங்கள், இந்த 2025 வருடத்தில் உள்ள கிரகங்களின் கோச்சார பலன்கள், தொழில் முன்னேற்றம் காலம், வீடு கட்டுவதற்கு உகந்த காலம், திருமணத்திற்கான காலம் ஆகிய தகவல்களை நீங்கள் Pdf வடிவில் பெறலாம்.